இஸ்ரேல் முழுவதும் பாரிய எவுகணை தாக்குதல்! ஹைஃபாவை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்
இஸ்ரேல் முழுவதும் உள்ள முக்கிய நகரங்கள் மீது ஈரான் ஒரு பெரிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
இதன்படி நாடு தழுவிய எச்சரிக்கைகள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளால் விடுக்கப்பட்டுள்ளதாகவும், குடியிருப்பாளர்கள் உடனடியாக தங்குமிடம் தேடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்
இந்நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் ஈரானிய ஏவுகணைகள் ஹைஃபா மற்றும் ஜெருசலேமில் உள்ள இலக்குகளைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலுக்கு ஈரானில் இருந்து சுமார் 25 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹைஃபா மற்றும் பீர்ஷெபாவில் உள்ள முக்கிய இலக்குகளை ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்திய தாக்குதல்களில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 4 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
