ஈரான் வெளிவிவகார அமைச்சர் மீண்டும் பாகிஸ்தான் வருகை
ஈரான் மீதான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஈரானிய வெளி விவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஓமனுக்கான தனது பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு வந்துள்ளார்.
முன்னதாக சனிக்கிழமை அன்று இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்த அரக்சி, ஈரானுக்கு எதிரான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு செயல்படக்கூடிய திட்டத்தை அவர்களிடம் பகிர்ந்து கொண்டதாகத் தெரிவித்தார்.
ஈரான் அமைச்சரின் வருகையைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்குச் செல்லவிருந்த அமெரிக்கத் தூதுவர்களின் பயணத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரென இரத்து செய்துள்ளார்.
தீர்வு வழங்கக்கூடாது என்பதற்காகவே ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இழுத்தடிக்கப்படுகின்றது - தவிசாளர் யுகதீஸ் விசனம்
பேச்சுவார்த்தை
இது குறித்து கருத்துத் தெரிவித்த அரக்சி, இராஜதந்திர ரீதியாகச் செயல்படுவதில் அமெரிக்கா உண்மையிலேயே ஆர்வமாக உள்ளதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நேரடிப் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் மங்கலாகத் தெரிந்தாலும், பாகிஸ்தானின் மத்தியஸ்தம் மூலம் போரை நிறுத்த எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 2 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri