தீர்வு வழங்கக்கூடாது என்பதற்காகவே ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இழுத்தடிக்கப்படுகின்றது - தவிசாளர் யுகதீஸ் விசனம்
வடமராட்சி கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடாத்தப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு மேலும் அவர் தெரிவித்ததாவது,
பிரச்சனைகளுக்கான தீர்வு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பல்வேறு பட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.இந்த பிரச்சனைகளுக்கான தீர்வு இதுவரை இல்லாததால் மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்க வேண்டும் என்று சொன்னால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை நடத்தியே ஆக வேண்டும் வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்ட விரோதமான மீன்பிடி நடவடிக்கைகள் தலை தூக்கி இருக்கின்றன. கடல் வளம் விரைவாக அழிந்து கொண்டிருக்கின்றது.
யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு
ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தான் இவ்வாறு மக்கள் தமது பிரச்சினைகளை கதைத்து வந்தார்கள்.அது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவரை பேசப்பட்டது.ஆனால் இந்த வருடம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இதனை வைத்து பார்க்கும் போது இவ்வாறுமாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை நடத்தினால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்பதற்காகவே DCC கூட்டம் இழுத்தடிப்பு செய்யப்படுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 17 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri