நாணயத்தாள் பயன்படுத்துபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
இரத்மலானை மற்றும் இம்புல்கொட ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து சுமார் 91.2 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போலி பண நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து போலி 5000 ரூபா நோட்டுகள் இரண்டும், போலி 2000 ரூபா நோட்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
விசாரணை முன்னெடுப்பு
கைது செய்யப்பட்டவர்கள் 25, 29, 30, 32, 35 மற்றும் 52 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் இம்புல்கொட, தெஹிபிட்டிய, பெலெந்த மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாணயத்தாள்களை பயன்படுத்தும் போது அவதானமாக இருக்க வேண்டுமென மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாணயத்தாள்கள் தமது கைகளுக்கு வரும் போது அது தொடர்பில் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திடீரென நுழைந்த ஆயுததாரி! சரமாரியான துப்பாக்கிச்சூட்டை நடத்திய பாதுகாப்பு படை - ட்ரம்ப் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 2 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri