கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டுடன் வெளிநாட்டவர் கைது
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல்கேரிய நாட்டு போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜப்பான் செல்ல முயன்ற 41 வயதுடைய ஈரானியப் பிரஜை ஒருவரை குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் நேற்று(22.03.2024) இரவு கட்டாரிலிருந்து வருகை தந்து ஜப்பான் நாட்டிற்கு புறப்படும் விமானத்தில் ஏற முற்பட்ட போது ஆவணங்களை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார்.
நாடு கடத்த தீர்மாானம்
இந்நிலையில் அவருடைய ஆவணங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் குடிவரவு, குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது அவரது பயணப்பொதிகளை சோதனையிட்ட போது போலியான கடவுச்சீட்டுகளும் போலி முத்திரைகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜையை குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், அவரை நாடு கடத்துவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த கட்டார் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
