ஏழு வாரத்திற்கு பின்னர் வான்வெளியை மீண்டும் திறக்கும் ஈரான்! வெளியான அறிவிப்பு
போர் காரணமாக ஏழு வார கால இடைவெளிக்குப் பிறகு, ஈரான் தனது வான்வெளியைப் பகுதியளவு மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசுக்குச் சொந்தமான ஈரான் ஊடகமொன்றின் படி கிழக்கு ஈரான் மீதான வான்வழிப் பாதைகள் காலை 7 மணிக்கு (0330 GMT) மீண்டும் திறக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.
விமான சேவைகள்
நாட்டின் விமான நிலையங்களில் விமான சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கும் என்றும், ஆனால் அதற்கான காலக்கெடுவை குறிப்பிடவில்லை.

பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, ஈரானின் வான்வெளி மூடப்பட்டிருந்தது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலான நிலையில், இந்த பகுதி அளவிலான திறப்பு நிகழ்ந்துள்ளது.
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan