திறக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை.. அணிவகுப்பெடுத்து வெளியேறும் பல கப்பல்கள்!
கடல் போக்குவரத்து (MarineTraffic) கண்காணிப்பு தளத்தின் தரவுகளின்படி, கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக பயணிக்கத் தொடங்கியுள்ளன.
எண்ணெய், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) மற்றும் இரசாயனங்களை ஏற்றிச் செல்ல வடிவமைக்கப்பட்ட கப்பல்கள் உட்பட பல கப்பல்கள் இந்த முக்கியமான கடல் வழித்தடத்தைக் கடந்து செல்வதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிபடுத்தியுள்ளன.
அதேநேரம், முன்னதாக போர் தொடங்கியதிலிருந்து முதல் உல்லாசக் கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
முதல் பயணிகள் கப்பல்..
பயணிகள் இல்லாமல் பயணித்ததாகக் கூறப்படும் குறித்த கப்பல், ஹோர்முஸை வெற்றிகரமாகக் கடந்துள்ளது என்றும், போர் தொடங்கியதிலிருந்து அதனை கடந்து சென்ற முதல் பயணிகள் கப்பல் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மால்டா கொடியுடன் கூடிய 'செலஸ்டியல் டிஸ்கவரி' கப்பல், மார்ச் மாத தொடக்கத்தில் துபாய்க்கு வந்தடைந்து, கிட்டத்தட்ட 47 நாட்களாக அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.
வெள்ளிக்கிழமையன்று ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இக்கப்பல், தற்போது ஓமானின் மஸ்கட்டை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், இன்று பிற்பகலில் அங்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் தாங்கிகள் கப்பல்களின் அணிவகுப்பு காணப்பட்டதாகவும் மேற்கோள் காட்டிய கப்பல் கண்காணிப்புத் தரவுகளின்படி, தாங்கிகள் கப்பல்களின் அணிவகுப்பு ஒன்று அரேபிய வளைகுடாப் பகுதியிலிருந்து புறப்பட்டு ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதாகவும் கூறப்படுகின்றது.
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்... சீரியலுக்கு இவ்வளவு மவுசா? Cineulagam