இரணைமடுகுளத்திற்கு கீழான விவசாயிகளிடம் அறவிடப்பட்ட நிதி தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
கிளிநொச்சி (Kilinochchi) - இரணைமடுகுளத்தின் கீழான விவசாயிகளிடம் இருந்து அறவிடப்பட்ட பதினொரு மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட நிதி எந்த திணைக்கள அதிகாரிகளின் அனுமதியுமின்றி செலவிடப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாகவும் கிளிநொச்சி மாவட்டத்தின் முதன்மையான விவசாய குளமாகவும் காணப்படுகின்ற இரணைமடு குளத்தின் கீழ் உள்ள விவசாயிகளிடமிருந்து கடந்த 2015ஆம் ஆண்டு - 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அறவிடப்பட்ட கோடிக்கணக்கான நிதி எந்த திணைக்கள அதிகாரிகளின் அனுமதியுமின்றி செலவிடப்பட்டுள்ளதாக தகவலறியும் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளது.
நிதி வைப்பு
அதாவது, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் குறித்த நிதிகளை அறவிடுவதற்கு உரிய தீர்மானங்கள் மாவட்ட பயிர்செய்கை குழு கூட்டங்களிலே நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
அதனை செலவு செய்வதற்கு எந்த அனுமதிகளும் பெறப்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு சுமார் 11 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட நிதி விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தினால் அறவிடப்பட்ட நிதியானது உரிய திணைக்களங்களின் அனுமதி பெறப்படாமல் வங்கிகளில் நிதி வைப்பு செய்யபடாமலும் முறையற்ற விதத்திலே செலவு செய்யப்பட்டிருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர் Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
