மட்டக்களப்பில் இடம்பெற்று வரும் வேட்புமனு தாக்கல் நடவடிக்கைகள்
இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் தற்போது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றன.
அதேவேளை, இன்று (07.10.2024) மாவட்டத்தில் முதலாவது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்கள், என தமது வேட்புமனுக்களை மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளன.
நாடாளுமன்ற தேர்தல்
தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியின் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் தலைமை வேட்பாளருமான தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, சுயேட்சை குழு சார்பில் லவக்குமார் தலைமையில் சுயேட்சை குழு ஒன்று தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது அரசியல் கட்சியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலுக்கான தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
மேலும், மாவட்டத்தில் 3 சுயேட்சை குழுக்களும் ஒரு அரசியல் கட்சியும் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - குமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
