இன்றுடன் நிறைவடையும் டரம்பின் காலக்கெடு! தெஹ்ரானில் பதற்றம் - நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்
ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஹோர்மூஸ் நீரிணையை மீண்டும் திறக்காவிட்டால், ஈரானின் மின்நிலையங்கள் மீது இராணுவ தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த காலகெடு இன்று மாலையுடன் நிறைவிற்கு வருகின்றது.
தெஹ்ரானில் பதற்றம்
இதனால் அச்சமடைந்த ஈரான் தலைநகர் மக்களால் எரிபொருளை சேமித்து வைக்க எரிபொருள் நிலையங்களுக்கு அவசரமாக செல்லப்பட்டு வருகிறது என்று அங்குள்ள பொதுமகனொருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அதிகாரிகள் ஒவ்வொரு வாகனத்திற்கும் 20 லிட்டர் பெட்ரோல் மட்டுமே வழங்கும் வகையில் கட்டுப்பாடு விதித்துள்ளதால், மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை, ட்ரம்ப் தனது மிரட்டல்களை நடைமுறைப்படுத்தினால், பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்தது.
ஹோர்மூஸ் நீரிணை
நாட்டின் Islamic Revolutionary Guard Corps (IRGC) எந்தத் தாக்குதலுக்கும் சமமான பதிலை வழங்கும் என தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஒரு ஈரானிய தகவல் மூலத்தின் கூற்றுப்படி, அந்த கடல் பாதையின் கட்டுப்பாட்டை பொருளாதார ரீதியாக பயன்படுத்தும் நடவடிக்கைகளில் தெஹ்ரான் முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam