ஈரான் போரினால் உலகப் பொருளாதார வளர்ச்சி முடக்கம்
ஈரான் மீதான போர் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக, உலகப் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு முழுமையாக முடங்கும் அபாயம் உள்ளதாகப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு (OECD) எச்சரித்துள்ளது.
2026ஆம் ஆண்டிற்கான உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை முன்னதாக 3.2 சதவீதமாக உயர்த்தி மதிப்பிட்டிருந்த பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு, தற்போது நிலவும் போர்ச் சூழலால் அந்த வளர்ச்சி அப்படியே சரிந்து பூஜ்ஜிய நிலையை எட்டும் என்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் தடைபட்டு, எரிசக்தி விலைகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவது உலக நாடுகளின் பணவீக்கத்தை (Inflation) மீண்டும் அதிகரிக்கச் செய்துள்ளது.
]
பொருட்களின் தட்டுப்பாடு
இந்தப் போர் நீடித்தால், வளர்ந்த நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்து, மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு தலைமைப் பொருளாதார நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

இது நுகர்வோரின் வாங்கும் சக்தியைக் குறைப்பதுடன், சர்வதேச வர்த்தகத்திலும் பெரும் தேக்க நிலையை உருவாக்கும்.
குறிப்பாக ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் இந்த எரிசக்தி அதிர்ச்சியால் (Energy Shock) நேரடியாகப் பாதிக்கப்படும் என்றும், உலகளாவிய விநியோகச் சங்கிலி (Supply Chain) சீர்குலைந்துள்ளதால் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.