மத்திய கிழக்கின் போர் பதற்றம்: ஜனாதிபதியின் விசேட செய்தி
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழலைக் கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் முன்வந்து அமைதியான உலகத்தை ஏற்படுத்த தேவையான அர்ப்பணிப்பு மற்றும் வழிகாட்டுதலை விரைவில் வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் போர் சூழ்நிலை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் இன்று (03) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர்,
மோதல்களால் பாதிக்கப்படும் மக்கள்
யுத்தம் மற்றும் மோதல்கள் எந்தவொரு மக்கள் குழுவிற்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்காது. தொழில்நுட்பம் மற்றும் இராணுவத்தின் தேவைப்பாட்டுக்காக மிகப் பாரிய ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை உருவாக்கும் உலகத்திற்கு இது எவ்வளவு அழிவுகரமானது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, இந்தப் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அமைதியான உலகத்திற்குத் தேவையான அர்ப்பணிப்பு மற்றும் வழிகாட்டுதலை விரைவில் எடுக்க வேண்டும் என்பதே இலங்கை என்ற வகையில் எங்களின் நிலைப்பாடு.

இந்தப் போர் நிலைமை இலங்கை மக்களின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். தனிமையில் இருந்து அதை நாம் வெற்றிக் கொள்ள முடியாது என்றும் ஜனாதிபதி கூறினார்.
ஒரு நாடாக இதைச் சமாளிக்க ஒரு திட்டம் வகுக்கப்படும் என்றும், அமைதியான உலகத்திற்கான சர்வதேச அர்ப்பணிப்பு மூலம் மட்டுமே இதை அடைய முடியும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri