ஈரான் போர் எதிரொலி: பிரித்தானிய சில்லறை விற்பனை 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி
ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பணவீக்க அச்சத்தால், பிரித்தானியாவின் சில்லறை விற்பனை (Retail Sales) கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
பிரித்தானிய தொழில்துறை கூட்டமைப்பு (CBI) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, மார்ச் மாதம் -52 ஆக இருந்த விற்பனை அளவு, ஏப்ரலில் -68 ஆகக் குறைந்துள்ளது.
இது 1983ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த அளவீடாகும். மத்திய கிழக்கில் நீடிக்கும் போர் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் தங்கள் செலவுகளைக் குறைத்துக் கொண்டதே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
பொருளாதாரப் பாதுகாப்பின்மை
எதிர்வரும் மே மாதத்திலும் இந்த மந்தநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், வணிக நிறுவனங்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.

இது கடந்த 2021ஆம் ஆண்டு கொவிட்-19 பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமான பொருளாதாரச் சூழலாகும்.
இந்த இக்கட்டான நிலையில் இருந்து வணிகங்களைக் காக்க, சொத்து வரிகளைக் குறைக்கவும், மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கவும் பிரித்தானிய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று CBI பொருளாதார நிபுணர் மார்ட்டின் சார்டோரியஸ் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, ஊழியர்களுக்கான புதிய சட்டங்கள் மூலம் நிறுவனங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நுகர்வோர் மத்தியில் நிலவும் அவநம்பிக்கை மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பின்மை காரணமாக ஏப்ரல் மாதத்தில் விற்பனை சரிந்திருப்பதாக சில்லறை விற்பனைச் சங்கிலிகள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்..! திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய பலத்திற்கும் புதிய சக்தியின் எழுச்சிக்கும் இடையிலான போட்டி
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam