எதிரிகளுக்காக ஹோர்முஸை திறக்க மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்
ஹோர்முஸ் நீரிணை தமது தேசத்தின் எதிரிகளுக்காக ஒருபோது திறந்துவிடப்படாது என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு, தடையற்ற மற்றும் தெளிவான நிலை ஏற்படும் போது அது குறித்துப் பரிசீலிப்பதாக ஈரானிய தலைவர் தமது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் அதற்கு பதிலளிக்கும் வகையில் தகவல் வெளியிட்டுள்ள ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, நிலைமை உறுதியாகவும் ஆதிக்கத்துடனும் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
போர்நிறுத்தம்
அமெரிக்க ஜனாதிபதியின் இத்தகைய கேலிக்குரிய செயல்களால் இந்தத் தேசத்தின் எதிரிகளுக்கு அது ஒருபோதும் திறந்துவிடப்படாது. ஈரானிய தலைவர் போர்நிறுத்தம் கோரியுள்ளதாகச் சற்று முன்னர் ட்ரம்ப், தெரிவித்திருந்தார்.

இதேவேளை, மத்திய கிழக்கு போரினால் முடக்கப்பட்டுள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, சுமார் 35 நாடுகளின் கூட்டத்தை பிரித்தானியா இந்தவாரம் நடத்தும் என்று அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.