தடுப்புப் போர்கள் உலகையே தீக்கிரையாக்கும்:பியட்ரோ பரோலின் எச்சரிக்கை
வத்திக்கானின் வெளிவிவகார அமைச்சரான கர்தினால் பியட்ரோ பரோலின், தற்போதைய உலகளாவிய மோதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டங்கள் சிதைக்கப்படுவது "உண்மையிலேயே கவலைக்குரியது" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எச்சரிக்கை
அத்தோடு, ஒரு நாடு தனது சொந்த அளவுகோல்களின் அடிப்படையில், எவ்வித சர்வதேச சட்டக் கட்டமைப்புமின்றி முன்கூட்டியே தாக்குதல் நடத்தும் "தடுப்புப் போர்" என்ற உரிமையை எடுத்துக்கொண்டால், அது ஒட்டுமொத்த உலகையும் போர்த் தீயில் தள்ளிவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

"சட்டத்தின் வலிமை" என்பது தற்போது "வலிமையின் சட்டம்" (Law of Force) என்பதாக மாற்றப்பட்டுள்ளதாகவும், எதிரியை அழிப்பதன் மூலமே அமைதியை நிலைநாட்ட முடியும் என்ற தவறான மனநிலை மேலோங்கியுள்ளதாகவும் அவர் தனது நேர்காணலில் சாடியுள்ளார்.
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam