ஈரானுக்கு 30 மில்லியன் டொலர்களை இரகசியமாக வழங்குவதில் அமெரிக்கா தீவிரம்!
ஈரான், யுரேனியம் செறிவூட்டுவதை நிறுத்தினால் அணுமின்சக்தி திட்டத்தில் 30 மில்லியன் டொலர் முதலீடு உள்ளிட்ட பல சலுகைகளை வழங்க அமெரிக்கா முன்வருவதாக அறிவித்தது.
அத்துடன், பொருளாதார தடைகள் நீக்கம், வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்ட பணம் விடுவிப்பு உட்பட பல விடயங்கள் அவற்றில் அடங்கும்.
அண்மையில் இஸ்ரேலிய - ஈரானிய மோதல், மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக போர் களமிறங்கியது.
இதனை தொடர்ந்து, இஸ்ரேலிய - ஈரான் இடையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில், அமெரிக்கா, ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி பல சலுகைகளையும் வழங்கியது.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




