வளைகுடா நாடுகளில் ஈரான் - அமெரிக்கா மோதல் தீவிரம்: குவைத் மீது ட்ரோன் தாக்குதல்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், குவைத் தனது வான்பரப்பில் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
Qeshm தீவு மீதான அமெரிக்காவின் தாக்குதலில் குடியிருப்புப் பகுதிகளுக்கு சேதம் ஏற்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.
ட்ரோன் தாக்குதல்
இந்த நிலையில், அமெரிக்க இராணுவ ரேடார் அமைப்பைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக பஹ்ரைய்ன் கூறியுள்ளது.
எனினும், தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமது வான் பாதுகாப்புப் படைகள் எதிரி ட்ரோன்களை இடைமறித்து வருவதாக குவைத் அறிவித்துள்ளது.
பேச்சுவார்த்தை
இதற்கிடையில், ஈரான் மற்றும் ஓமான் வெளியுறவு அமைச்சர்கள் கடல்வழிப் போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் இராஜதந்திரத் தீர்வுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமைதி ஒப்பந்தத்திற்கான முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன.