ஆனந்தபுரச் சமரில் பயன்படுத்திய ஆபத்தான ஆயுதங்கள் காஸா களமுனைகளில் (Video)
இஸ்ரேல் - ஹமாஸ் போர் வலுப்பெற்றுவரும் நிலையில் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான எச்சரிக்கையும் பகிரங்க கருத்தாடல்களும் அதிகரித்தவண்ணமுள்ளன.
இந்நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து ஈரானிய ஆன்மீகத்தலைவர் ''திட்டமிட்டவர் கைகளில் முத்தமிடுகின்றோம்'' என ஒரு கருத்தை வெளிப்படுத்திய விடயம் மேலும் இஸ்ரேல் போரில் ஈரானின் எதிர்ப்பை வலுப்படுத்தும் விடயமாக அமைந்திருந்தது.
மேலும் இந்த போரில் காசா களமுனைகளில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டவை போன்றது என்ற கருத்துக்களும் தமிழ் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன.
இவ்வாறு ஈரானின் உற்றுநோக்கல்களும், இஸ்ரேல் போரில் ஹமாஸிற்கான ஆதரவு குறித்தும் எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரித்தானிய அரசியல் விமர்சகர் அருள் தெரிவித்த கருத்துக்கள், இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் போரின் பின்னணிகளை விரிவாக வெளிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்த போரில் அமெரிக்கா எவ்வாறான கண்ணோட்டத்தை கொண்டுள்ளது என்பதனையும், மத்தியகிழக்கில் தனது ஆதிக்கத்தின் நிலைப்பாடுகளை எவ்வாறு இஸ்ரேலுடன் கைகோர்த்து நகர்த்துகின்றது என்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசியல் விமர்சகர் அருள் தெரிவிக்கையில்'' அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பலஸ்தீனத்துக்கு எதிராக வெளிப்படுத்திய அச்சுறுத்தல், கருத்துக்கள் அனைத்தையும் இந்த தாக்குதல் முறையடித்துள்ளது. உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான சமர்ப்பணமாகவும் காணப்படுகிறது.'' என்ற கருத்தினை முன்வைத்திருந்தார்.
இவ்வாறு இஸ்ரேல் - ஹமாஸ் போர்நிலை குறித்தும் அதன் தாக்கங்களுக்கு ஈரான், அமெரிக்க வழங்கும் ஆதரவுகள் குறித்தும் விரிவாக ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு...