டொனால்ட் ட்ரம்பை மிரள விட்ட ஈரான்! பிரித்தானிய பிரதமரின் அதிர்ச்சித் தகவல்
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைகளில் பிரிட்டன் இணையாது என்று அந்நாட்டு பிரதமர் கீர் ஸ்டார்மர் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்காக, பிரிட்டனின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ள போதிலும், அவை “ஒப்புக்கொள்ளப்பட்ட தற்காப்பு நோக்கங்களுக்காக மட்டுமே” பயன்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து பிரதமர் கீர் ஸ்டார்மர் மேலும் கூறியதாவது,“அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புத் தாக்குதல்களில் நாங்கள் இணையப் போவதில்லை. நீண்டகால நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் கூட்டுத் தற்காப்புக்காகவும், பிரிட்டிஷ் உயிர்களைப் பாதுகாப்பதற்காகவும் மட்டுமே இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி...