இஸ்ரேலை குறிவைத்த ஈரான் : ஜி7 நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் இணைந்து இஸ்ரேல் மீது கொடிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்(Antony Blinken) ஜி7 நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், இஸ்ரேலை சேர்ந்த முன்னணி செய்தி நிறுவனம் இஸ்ரேல் மீதான தாக்குதலை தடுக்கும் நோக்கில் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல் வெளியிட்டுள்ளது.
உளவு அமைப்புகள்
அதன்படி நேதன்யாகு கூட்டிய அவசர ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவ் கல்லாட் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் பாதுகாப்பு படை தலைவர் ஹெர்ஸி ஹலேவி மற்றும் இஸ்ரேலின் முன்னணி உளவு அமைப்புகளான மொசாத் மற்றும் ஷின் பெட் ஆகியவற்றின் தலைவர்களான டேவிட் பர்னி மற்றும் ரோனென் பார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கடந்த 30 ஆம் திகதி ஹிஸ்புல்லா மூத்த தலைவர் ஃபௌத் சகரை (laud Shukr) இஸ்ரேல் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொன்றதை தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் ஈரான், ஹிஸ்புல்லா இடையே பதற்ற சூழலை உருவாக்கி இருக்கிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்த தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல், ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்த தீவிரம் காட்டுவதாக வெளியாகும் தகவல்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |