இலங்கையின் பாதுகாப்பு வலயத்திற்குள் ஈரானிய கப்பல் எப்படி தாக்கப்பட்டது..! சபையில் அரசாங்கத்திடம் கேள்வி
இலங்கை கடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டிய ஒரு வலயத்திற்குள் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலுக்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வினவியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (04.03.2026) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை வினவியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் அல்லது அதற்கு மிக அருகாமையிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கப்பல் எங்கிருந்து வந்தது
இலங்கை கடற்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, காயமடைந்தவர்களை மீட்டு காலி போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இத்தகைய பின்னணியில் இந்தக் கப்பல் எங்கிருந்து வந்தது?

இது இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படைப் பயிற்சியில் கலந்து கொண்டுவிட்டு அரபிக்கடலை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த கப்பலா? அல்லது இலங்கையை நோக்கி வருகை தந்த கப்பலா?
இலங்கை கடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டிய ஒரு வலயத்திற்குள் இத்தகைய தாக்குதல் எப்படி அனுமதிக்கப்பட்டது? இந்த விபரங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam