ட்ரம்ப் பின்வாங்கிய சில மணி நேரங்களுக்குப் பின்னர் குறிவைக்கப்பட்ட ஈரானின் எரிவாயு நிலையங்கள்
அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்கள், இரண்டு எரிவாயு நிலையங்களையும் ஒரு குழாயையும் குறிவைத்ததாக ஈரானின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மின்சார உள்கட்டமைப்புகளை தாக்குவோம் என்ற மிரட்டலிலிருந்து டொனால்ட் ட்ரம்ப் பின்வாங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகே இந்த தாக்குதல்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
எரிவாயு நிலையங்கள்
சியோனிச மற்றும் அமெரிக்க எதிரிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களின் ஒரு பகுதியாக, இஸ்பஹான் நகரில் கவேஹ் வீதியில் உள்ள எரிவாயு நிர்வாகக் கட்டிடமும், எரிவாயு அழுத்த கட்டுப்பாட்டு நிலையமும் குறிவைக்கப்பட்டன” என்று Fars News Agency தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய ஈரானில் உள்ள அந்த வசதிகள் பகுதியாக சேதமடைந்துள்ளன என்றும் கூறப்பட்டது.
அதேபோல், நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள கோர்ரம்ஷாஹர் மின்நிலையத்துக்கான எரிவாயு குழாயும் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri