மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்: அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் "மிகக்கடுமையான" பழிவாங்கலை முன்னெடுப்பதாக எச்சரித்துள்ளது.
கடந்த 28ஆம் திகதி ஈரானிய புரட்சிகர காவல் படை (IRGC) மத்திய கிழக்கு முழுவதும் தாக்குதல்களை நடத்தியது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது "பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல்" (Devastating offensive operation) நடத்தப்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
பதிலடிக் கொடுக்க காத்திருக்கும் ஈரான்
"ஈரான் மீண்டும் தாக்கினால், இதுவரை கண்டிராத பலத்துடன் பதிலடி கொடுப்போம்" என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியப் பிரதமர் கீத் ஸ்டார்மர், தற்காப்பு நடவடிக்கைகளுக்காக பிரித்தானிய விமானங்கள் வான்பரப்பில் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ, இன்று G7 நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
ஈரானில் ஒரு தரப்பினர் கமேனியின் மறைவைக் கொண்டாடி வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் வீதிகளில் இறங்கித் துக்கம் அனுசரித்து வருகின்றனர்.
இந்த இக்கட்டான தருணத்தில், ஈரானிய அதிகாரிகள் நாட்டில் அதிகார மாற்றம் சீராக நடப்பதையும், ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும் விரும்புவதாக சர்வதேச செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam