ஆயுதப் படைகளின் வசம் ஹோர்முஸ் நீரிணை: எந்தவொரு நாடும் பயன்படுத்த இடமளிக்கமாட்டோம் - ஈரான் எச்சரிக்கை
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஹோர்முஸ் நீரிணையை எந்தவொரு நாடும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாயி தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் பிராந்தியத்தில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதால், தற்போது இந்த கடல் வழியாக கப்பல் போக்குவரத்து விசேட நிபந்தனைகளின் கீழ் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதிலடி கற்பனைக்கு எட்டாத கடுமையாக இருக்கும்: ஈரான் அதிரடி எச்சரிக்கை - அண்டை நாட்டு அமெரிக்க தளங்களும் இலக்கு
தேசிய பாதுகாப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு ஈரானிய ஆயுதப் படைகளின் வசம் இருப்பதாகவும், தனது தேசியப் பாதுகாப்பிற்காகத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு ஒரு கடற்கரை நாடு என்ற ரீதியில் ஈரானுக்கு உரிமை உண்டு.

வரலாற்று ரீதியாக இந்த கடல் பாதையின் பாதுகாவலனாக ஈரான் இருந்து வந்த போதிலும், தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே பொறுப்பேற்க வேண்டும்.
உலகின் எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான இந்த கடல் பாதையை, தங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் நாடுகள் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என கடுமையாக எச்சரித்துள்ளார்.
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam