ஓமனுடான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியதாக ஈரான் அறிவிப்பு
ஹோர்முஸ் நீரிணையில் கடல்சார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடல்சார் கப்பல்கள் நுழைவது மற்றும் வெளியேறுவதற்கான வழிகள் உட்பட பெரும்பாலான முக்கிய அம்சங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர புரிதல் எட்டப்பட்டுள்ளதாக ஈரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி தெரிவித்துள்ளார்.
ஈரானின் அதிகாரப்பூர்வ 'இர்னா' செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இரு நாடுகளுக்கும் இடையிலான இறுதி ஒப்பந்தம் "நிறைவடையும் தருவாயில் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான அவரது கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறெனினும் இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்கா தனது அதிகாரபூர்வ நிலைப்பாடை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.