பேச்சுவார்த்தைக்கு தயாரான ஈரான்! பெசேஷ்கியான் விடுத்துள்ள எச்சரிக்கை
இஸ்ரேல் தம்மீது முதலில் தாக்குதல் நடத்தாவிட்டால் ஈரான் பதிலடி தாக்குதலை ஒருபோதும் நடத்தியிருக்காது என ஈரான் ஜனாதிபதி மசௌட் பெசேஷ்கியான்(Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார்.
ஈரான் தற்காப்பு நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ளும் என்றும், இஸ்ரேல் முதலில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மோதலைத் தொடர்ந்திருக்காது எனவும், அவர் கூறியுள்ளார்.
இது, ஈரானின் இராஜதந்திர மற்றும் இராணுவ நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
மேலும் ஈரான் பேச்சுவார்த்தை மேசைக்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதியின் இந்தக் கூற்று, ஈரான் தன்னை ஒரு தற்காப்பு நிலைப்பாட்டில் உள்ளதாகக் காட்ட முயல்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளே மோதலுக்கு முக்கிய காரணம் என்று வலியுறுத்துகிறது.
இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை குறைக்கவும், இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கலாம்.
ஆனால் இஸ்ரேலின் தொடர் நடவடிக்கைகள் இதற்கு தடையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
