2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தேசிய கீதம் பாட ஈரான் வீரர்கள் மறுப்பு! வெளியான காரணம்
2022 உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகின்றது.
கால்பந்து தொடரில் இன்று ஈரான் - இங்கிலாந்து அணிகள் மோதியுள்ளன.இப்போட்டி துவங்குவதற்கு முன்பாக இரு நாடுகளில் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டது.
இதன்போது , ஈரான் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அந்நாட்டின் வீரர்கள் யாரும் தேசிய கீதத்தை பாடாமல் வாயை அசைக்காமல் நின்றுள்ளனர்.
Iran’s national team did not to sing national anthem as the #EnglandVsIran game kicks off #FIFAWorldCup, in support of the country’s women-led revolution. The Iranian crowd were also booing their own national anthem. Amazing! ✊? pic.twitter.com/qBwZqYHbqF
— Shabnam Nasimi (@NasimiShabnam) November 21, 2022
ஈரானில் போராட்டக்காரர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை
ஈரானில் போராட்டக்காரர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்தும் வரும் நிலையில் ஈரான் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்த உலகக்கோப்பையின் போது தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது வீரர்கள் கீதம் பாடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசுக்கு எதிராகவும் ஈரானில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உலகக்கோப்பை போட்டியின் போது ஈரான் கால்பந்து வீரர்கள் தேசிய கீதத்தை பாடாமல் நின்றமை தற்போது பேசுபொருளாகியுள்ளது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
