இஸ்ரேலுக்கு ஈரான் கொடுத்த பலத்த அடி.. 22 வருட கால தரவுகள் அழிப்பு
ஈரான், உலகளாவிய முக்கிய விஞ்ஞான ஆய்வுத்தளமான இஸ்ரேலின் வைஸ்மேன் அறிவியல் நிறுவனம் (Weizmann Institute of Science) மீது ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இஸ்ரேலின் இந்த முக்கிய ஆய்வுத்தளத்தில் இருந்த 50 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஆய்வுகள் நாசமாகியுள்ளன.
இஸ்ரேலின் ரெஹோவோத் பகுதியில் உள்ள இந்த ஆய்வுத்தளம், நியூரோ வளர்ச்சி குறைபாடுகள், புற்றுநோய், மற்றும் இதய நோய்கள் தொடர்பான ஆய்வுகளில் முன்னணியில் இருந்தது.
பாரிய இழப்பு
குறித்த தளத்தின் மீதான ஈரானிய தாக்குதலில் இரண்டு முக்கியக் கட்டிடங்கள், 45 ஆய்வுக்கூடங்கள், ஆயிரக்கணக்கான மாதிரிகள் மற்றும் 22 ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆய்வகத்தில் 16 ஆண்டுகளாக ஆய்வு பணியில் ஈடுபட்டுவந்த ப்ரொஃ. ஓரன் சுல்டீனர் என்ற ஆய்வாளர், எமது ஆய்வுக்கூடம் முற்றிலும் மண்ணாகிப்போயுள்ளது. எதையும் மீட்க இயலாது என கூறியுள்ளார்.
🚨
— The Tradesman (@The_Tradesman1) June 20, 2025
Iran launched a ballistic missile strike on the Weizmann Institute of Science in Rehovot, Israel, causing extensive damage. The attack destroyed two buildings—a life sciences lab and an unfinished structure—and affected around 45 laboratories. Researchers reported the loss of… pic.twitter.com/7cZymBocr1
ஈரானின் இந்த அதிரடி தாக்குதல், இஸ்ரேலின் அறிவியல் மரபுகளுக்கு எதிரான மிகப்பாரிய இழப்பாக கருதப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும் பின்னடைவு
1934ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வைஸ்மேன் ஆய்வு நிறுவனம், நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் டூரிங் விருது பெற்றவர்கள் பலரைக் கொண்டுள்ளது. இது 1954இல் இஸ்ரேலின் முதல் கணினியையும் உருவாக்கியது.
இந்த ஆய்வுக்கூடங்கள், 2015இல் எலி மீது இதய உதிரிகளை மீள உருவாக்கி பெரும் பங்காற்றியது. தற்போது அந்த வளாகங்கள் பாழான கட்டிடங்களாக மாறிவிட்டன.
இது, உலகளாவிய அறிவியல் சமூகத்திற்கு ஒரு பெரும் பின்னடைவு எனவும், அறிவியல் வளர்ச்சியில் இஸ்ரேல் பெரும் பங்கு வகித்து வந்தது என்பதற்கான கடுமையான எதிரியல் தாக்கம் எனவும் விஞ்ஞானிகள் தெரி்வித்துள்ளனர்.















ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 12 மணி நேரம் முன்

மிகப்பெரிய புதையலை கண்டுபிடித்துள்ள இந்தியாவின் அண்டை நாடு.., அடுத்த 50 ஆண்டுகளுக்கான ஜாக்பாட் News Lankasri
