இஸ்ரேலில் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்! முக்கிய தொழிற்துறை வலயத்தில் பாரிய தீப்பரவல்: நச்சு வாயுக்கள் வெளியேறும் அபாயம்
புதிய இணைப்பு
இஸ்ரேலின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளைக் குறிவைத்து ஈரான் அடுத்தடுத்து நடத்திய ஏவுகணை தாக்குதல் காரணமாக இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை ஒலிகள் ஒலித்துள்ளன.
மத்திய இஸ்ரேலில் ஏவுகணைகள் விழுந்ததாக தகவல் வந்ததையடுத்து, தங்கள் படைகள் அவ்விடத்திற்குச் சென்றுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளன.
மேலும், ஏவுகணைகள் விழுந்த பகுதிகளைத் தவிர்க்குமாறு இராணுவம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதன்போது ஏவுகணைத்துண்டுகளில் ஒன்று மின்கம்பியின் மீது விழுந்ததால் சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும், மின்சாரம் விநியோகம் உடனடியாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
ஈரான் இன்று (04) காலை இஸ்ரேலின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளைக் குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன் காரணமாக இஸ்ரேலின் நெகேவ் (Negev) பகுதியில் அமைந்துள்ள தொழிற்துறை வலயம் ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன், இஸ்ரேலிய தீயணைப்பு படையினர் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்! விமானியை பிடித்தால் பரிசு - நேரடி மோதல் வெடிக்கும் அபாயம்
இடைமறிக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகள்
ஈரானிலிருந்து ஏவப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட ஏவுகணைகளை இடைமறிப்பதற்காக வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

இந்த ஏவுகணை தாக்குதல்களின் போது, ஏவுகணையின் சிதறல்கள் நெகேவ் பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் வீழ்ந்ததில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தெற்கு இஸ்ரேலை குறிவைத்து ஈரான் நடத்திய முதல் ஏவுகணைத் தாக்குதலின் காரணமாக, பீர்ஷேபா மற்றும் அராத் நகரங்களிலும், நெகேவ் பகுதியிலும் அபாய ஒலி எழுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் ஏழு நகரங்களில் ஏவுகணை சிதைவு
குறித்த தொழிற்துறை வலயத்தில் 40க்கும் மேற்பட்ட இரசாயன மற்றும் தொழில்நுட்பத் தொழிற்சாலைகள் இருப்பதால், நச்சு வாயுக்கள் வெளியேறக்கூடும் என்றும், எவ்வித அபாயகரமான கசிவுகளும் இதுவரை ஏற்படவில்லை என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் இரண்டாவது பதிலடித் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய இஸ்ரேலில் உள்ள ஏழு நகரங்களில் 17 வெவ்வேறு இடங்களில் ஏவுகணைச் சிதைவுகளும் சிதறல்களும் விழுந்ததாக இஸ்ரேலின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ஈரான் ஏவுகணைத் தாக்குதலால் மத்திய இஸ்ரேலில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலுக்கு மேல் அடுத்தடுத்த தாக்குதல்கள் காணப்பட்டதாகவும், இதில் டெல் அவிவில் ஒருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam