யாரும் பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் - ஈரான் கடும் தொனியில் எச்சரிக்கை
ஈரானின் (Iran) தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், எதற்கும் தயாராகவே இருப்பதாக ஈரானும் கூறியுள்ளதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்னொரு முறை இஸ்ரேல் (Israel) தங்களைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் தளபதி கூறுகையில், “நாங்கள் எங்களால் என்னவெல்லாம் முடியும் என்பது குறித்து ஆய்வு செய்கிறோம். பல ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவுவது ஒரு பதிலடி இருக்கும். சரியான நேரத்தில் மிக பெரியளவில் பதிலடி கொடுக்க நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார்.
ஈரான் இடையே தொடர்ந்து பதற்றம்
முன்னதாக நேற்று (திங்கள்கிழமை) இஸ்ரேல் (Israel) இராணுவத் தலைவர் ஹெர்ஸி ஹலேவி அளித்த பேட்டியில், “ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம். பிரதமர் நெதன்யாகுவின் (Prime Minister Netanyahu) முடிவுக்காகக் காத்திருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.
இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Prime Minister Netanyahu) முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவ தளபதி கூறியிருந்தார்.
ஈரான் தாக்குதல் தொடர்பாக இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவை கூட்டத்தை நடத்த உள்ளார். 24 மணி நேரத்திற்குள் பெஞ்சமின் நெதன்யாகு நடத்தும் இரண்டாவது கூட்டம் இதுவாகும்.
ட்ரோனுக்கு பதிலடி கொடுக்க நடவடிக்கை
இதுவரை பதில் தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் எந்தவொரு முடிவையும் எடுக்காத நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான அனைத்தையும் செய்யும் என்று நெதன்யாகு அமெரிக்க உயர் அதிகாரி ஸ்டீவ் ஸ்காலிஸுடனான தொலைப்பேசி உரையாடலில் கூறியதாக இஸ்ரேல் பிரதமர் (Prime Minister Netanyahu) அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதில் ட்ரோனுக்கு பதிலடி கொடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடைபெற்றது. இருப்பினும், அதில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அறிய முடிகிறது.
சர்வதேச நாடுகளின் அழுத்தம்
எனினும் சர்வதேச நாடுகளின் அழுத்தம் அதிகமாக இருப்பதால் இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றது.
அமெரிக்கா முதல் உலகின் பல நாடுகளும் இஸ்ரேல் நிலைமையை மோசமாக்கக்கூடாது என்றே கூறியுள்ளனர்.
இஸ்ரேல் ஈரான் இடையே போரை விரும்பவில்லை என்று கூறியுள்ள அமெரிக்கா, அந்த பிராந்தியத்தில் அமைதியையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |