அதிகரிக்கும் பதற்றம்! உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஈரான்
ஈரானில் இணைய இணைப்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு 32 நாட்கள் ஆகிவிட்டதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அரச அதிகாரிகள், அரச விசுவாசிகள் மற்றும் சில பத்திரிகையாளர்களால் மட்டுமே தடையின்றி இணையத்தைப் பயன்படுத்த முடிந்துள்ளது.
சிறைத்தண்டனை
அதன்படி, அந்நாட்டு மக்கள் 744 மணி நேரத்திற்கும் மேலாக உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, மீதமுள்ள மக்கள் இணையத்தைப் பயன்படுத்த அதிகப் பணம் செலவழிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஸ்டார்லிங்க் போன்ற செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் சிறிய எண்ணிக்கையிலான மக்களால் இணையத்தைப் பயன்படுத்த முடிந்தாலும், ஈரானில் ஸ்டார்லிங்கைப் பயன்படுத்துவது அல்லது வைத்திருப்பது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய ஒரு குற்றமாகும்.
இந்நிலையில், ஈரானிய அதிகாரிகள் தற்போது அத்தகைய சாதனங்களைக் கண்டறிய சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
வெடித்து சிதறிய ஈரானின் மிகப்பெரிய நிலத்தடி ஆயுத கிடங்கு! பஸ்டர் குண்டுகளால் குறிவைத்து தகர்த்திய அமெரிக்கா
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri