அடுத்த சில நாட்கள் மிக முக்கியமானதாக இருக்கும்! மேலும் வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை
மத்திய கிழக்கு மோதலில் அடுத்த சில நாட்கள் தீர்க்கமானதாக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புச்செயலாளர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார். இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஈரான் ஆயுதப்படைகளில் இருந்து பெரும் அளவில் வீரர்கள் தப்பியோடியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வெடித்து சிதறிய ஈரானின் மிகப்பெரிய நிலத்தடி ஆயுத கிடங்கு! பஸ்டர் குண்டுகளால் குறிவைத்து தகர்த்திய அமெரிக்கா
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை
"எங்களிடம் மேலும் மேலும் பல வாய்ப்புகள் உள்ளன, அவர்களிடம் குறைவாகவே உள்ளன. ஒரே மாதத்தில் நாங்கள் நிபந்தனைகளை நிர்ணயித்துவிட்டோம், வரவிருக்கும் நாட்கள் தீர்க்கமானதாக இருக்கும் என்று ஹெக்ஸெத் கூறியுள்ளார்.

"ஈரானுக்கு அது தெரியும், மேலும் இராணுவ ரீதியாக அவர்களால் எதுவும் செய்ய முடியாது."உளவுத் தகவல்களை மேற்கோள் காட்டி, இந்த தாக்குதல்கள் ஈரானிய இராணுவத்தின் மன உறுதியைக் குலைத்து வருவதாகவும் ஹெக்ஸெத் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை காண்பதற்காக, சனிக்கிழமையன்று மத்திய கிழக்கில் உள்ள துருப்புக்களைச் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு உதவுவதற்காக சீனாவும் ரஷ்யாவும் என்ன செய்கின்றன என்பதை அமெரிக்கா நன்கு அறிந்திருக்கிறது என்றும்,தேவைப்படும் இடங்களில் அந்த முயற்சிகளை எதிர்கொண்டு வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri