ஈரானில் தீவிரமடைந்த போர்க்களம்!கொத்துக்கொத்தாக கைது செய்யப்பட்ட மக்கள்
ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற 22000 நபர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஹிஜாபுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்
குறித்த 22000 பேர் உட்பட இதுவரை 82000 பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக நீதித்துறை தலைவர் ஏஜெய் கூறியதாக மேற்கோள்காட்டி அரசு ஊடகத்தில் இன்று செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால் எந்த காலக்கட்டத்தில் மன்னிப்பு வழங்கப்பட்டது? எப்போது குற்றம் சாட்டப்பட்ட வழக்கு? என்ற விரிவான தகவல் வெளியாகவில்லை.
மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படும் ஈரானில் அரசுக்கு எதிராக தீவிர போராட்டம் நடைபெற்றது.
முறையாக ஹிஜாப் அணியவில்லை என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண், பொலிஸாரால் தாக்கப்பட்டு இறந்த விவகாரம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கைதிகளுக்கு மன்னிப்பு
நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து போர்க்களமாக மாறியது.போராட்டக்காரர்கள் கொத்துக்கொத்தாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையிலேயே தற்போது 22000 பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை ஈரான் தலைவர் அலி காமேனி பல்லாயிரக்கணக்கான கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கியதாக அரசு ஊடகம் கடந்த மாதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
