ஹோர்முஸ் நீரிணையில் பற்றியெரிந்த கப்பல்! இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் அதிரடி ட்ரோன் தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணையில் பயணம் செய்து கொண்டிருந்த இஸ்ரேலுடன் தொடர்புடைய வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல்படை கடற்படைத் தளபதியை மேற்கோள் காட்டி வெளியான இந்தச் செய்தியில், இந்தத் தாக்குதலால் அந்தப் பெரிய கப்பல் தீப்பிடித்து எரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்தோ அல்லது இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தோ இஸ்ரேல் தரப்பிலிருந்து இதுவரை உடனடித் தகவலோ அல்லது அதிகாரப்பூர்வ கருத்தோ தெரிவிக்கப்படவில்லை.

உலகளாவிய எரிபொருள் போக்குவரத்திற்கு மிக முக்கியமான பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையில் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், ஏற்கனவே பதற்றமாக உள்ள மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 21 மணி நேரம் முன்
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam