ஈரானில் வெடித்துச் சிதறிய அமெரிக்க போர் விமானம்.. விமானியை தேடிவரும் ஈரானிய - அமெரிக்க இராணுவங்கள்!
புதிய இணைப்பு
ஈரான் வான்பரப்பில் அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிபடுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரான் வான்பரப்பில் ஒரு அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதன் குழுவினரைத் தேடும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் ஒரு அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், குழுவினரை மீட்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக விபத்துக்குள்ளான விமானியை அமெரிக்கா தேடி வருவதாக ஈரானிய ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
முதலாம் இணைப்பு
தென்மேற்கு ஈரான் பகுதியில் அமெரிக்க விமானி ஒருவர் தனது போர் விமானத்திலிருந்து பராசூட் மூலம் குதித்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகத்தின் கிளை நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஈரானிய வான்பரப்பில் அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
குவைத் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை..! பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்
அமெரிக்க விமானி..
இந்நிலையில், ஈரானின் கோகிலுயே மற்றும் போயர்-அகமது (Kohkilouyeh and Boyer-Ahmad) மாகாணத்தில் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று விடுத்துள்ள அறிவிப்பில், "எதிரி நாட்டு விமானி" யாரையாவது கண்டால் உடனடியாகப் பொலிஸாரிடம் ஒப்படையுங்கள் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பெரும் வெகுமதி அளிக்கப்படும் எனவும் அந்த ஊடகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, சமூக வலைதளங்களில் அமெரிக்க விமானங்கள் குறித்த காட்சிகள் வெளியானபோது, "அவர்களைக் கண்டால் சுடுங்கள்" என அந்தத் தொலைக்காட்சி திரையில் அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.
மேலும், ஒரு பிக்கப் வாகனத்தின் பின்புறத்தில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் போன்ற உலோகத் துண்டுகள் இருக்கும் காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டன.
திடீரென பதவி நீக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதி.. போருக்கு மத்தியில் ட்ரம்ப் நிர்வாகத்தில் குழப்பநிலை!