தலைவர்களைக் கொல்லக் கொல்ல வீறுகொண்டு எழும் ஈரான்! கடுங்குழப்பத்தில் ட்ரம்ப்!
மத்திய கிழக்கில் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில்,ஈரான் இஸ்ரேலிடமும் அமெரிக்காவிடமும் ஒருபோதும் சரணடையாது என பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஈடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஈரான் ஒரு பேச்சுவார்த்தைக்கு வரலாம்.ஆனால், இஸ்ரேலுடையதோ, அமெரிக்காவினுடையதோ அழுத்தத்தினால் வரப்போவதில்லை.
67 வயதுடையவர் போகின்ற பொழுது அடுத்து இளம் தலைமுறையினர் ஆட்சிக்கு வரப் போகின்றனர்.
இளம் தலைமுறையினரை ஆட்சிக்கு கொண்டு வருவதன் மூலம் இந்த யுத்தம் மேலும் கடுமையாக்கப்படும்.
ஈரானிடம் அணுஆயுதம் இல்லை எனத் தெரிந்த படியால் தான் போர் தீவிரமடைகின்றது.இதேவேளை, வடகொரியா தனது அணுஆயுத பலத்தை வெளிக்காட்டியதால் அமெரிக்கா அதனிடமிருந்து விலகியுள்ளது.
அத்தோடு, மத்திய கிழக்கில் அமைதி மற்றும் சமாதானம் வரக் கூடாது என்பதில் அமெரிக்காவும், இஸ்ரேலும் கண்ணும் கருத்துமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam