ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் கட்டணம் வசூலிக்கும் ஈரானின் முடிவு! சிக்கித்தவிக்ககும் 20,000 மாலுமிகள்
ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்கும் ஈரானின் முயற்சி சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும், இதனை உலக நாடுகள் நிராகரிக்க வேண்டும் என்றும் சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) பொதுச்செயலாளர் ஆர்செனியோ டோமிங்குவேஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் உடன்பாடு எட்டப்படாமல் முடிவுக்கு வந்த நிலையில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்தம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தக் கட்டண வசூலை இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் ஒரு கூட்டு முயற்சியாக மாற்றலாம் என்று யோசனை தெரிவித்திருந்தாலும், இத்தகைய கட்டணங்களை அறிமுகப்படுத்த நாடுகளுக்கு உரிமை இல்லை என டோமிங்குவேஸ் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து இன்னும் ஸ்தம்பித்துள்ளது.
20,000 மாலுமிகள்
போர் தொடங்குவதற்கு முன்னதாக நாள் ஒன்றுக்குச் சுமார் 135 கப்பல்கள் பயணித்த நிலையில், கடந்த சில நாட்களில் வெறும் 22 கப்பல்கள் மட்டுமே இந்த நீரிணையைக் கடந்துள்ளன.

ஈரானால் வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றி நீரிணையைச் சீர்செய்ய இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும், போர் முடிவுக்கு வந்தால் மட்டுமே இப்பகுதியில் இயல்பு நிலை திரும்புவதோடு, உலகப் பொருளாதாரத்திலும், அங்கு சிக்கியுள்ள சுமார் 20,000 மாலுமிகளின் வாழ்வாதாரத்திலும் முன்னேற்றம் ஏற்படும் என ஆர்செனியோ டோமிங்குவேஸ் வலியுறுத்தியுள்ளார்.
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam