ஹோர்முஸ் நீரிணையில் 45 கப்பல்களுக்கு ஈரான் தடை
ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதற்கான புதிய விதிமுறைகளை மீறியதாகக் கூறி, 45 எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லும் கப்பல்களை ஈரான் கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதுடன், அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் சூழ்நிலையில், ஈரான் தனது கடல்சார் எல்லைக் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஈரானால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 'பாரசீக வளைகுடா நீரிணை அதிகாரசபையினால்' இந்த அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஈரான் தடை
குறிப்பிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள கப்பல்கள் ஈரானியப் பிராந்தியத்திற்குள் நுழையும் பட்சத்தில், அவை தடுத்து வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதுடன், அவற்றில் உள்ள சரக்குகளும் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த தடை விதிக்கப்பட்ட கப்பல்களுடன் கடலில் வைத்து சரக்குகளைப் பரிமாறிக்கொள்ளும் ஏனைய பிற கப்பல்களும் உடனடியாகக் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

மற்றும் தென்கொரியா, நோர்வே போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் கப்பல்களும் அடங்குகின்றன.
ஹோர்முஸ் நீரிணையைக் கடப்பதற்கு ஈரானிய கடற்படை அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற வேண்டும் என்றும், பாதுகாப்பு சேவைகளுக்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தி வருகின்றது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening