ஈரானின் புதிய தந்திரோபயத்தின் பொறிக்குள் சிக்கிய ட்ரம்ப்!
நிபந்தனையில்லாமல் சரணடையுங்கள் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்கா ஜனாதிபதி டொனாட்ல்ட் ட்ரம்ப் இறுதியில் ஒரு யுத்த நிறுத்தம் ஏற்பட்டாலே போதும் என்ற தீர்மானத்திற்கு வந்திருந்தார்.
இழப்புக்கள் ஏற்பட்டாலும், அழிவுகள் வந்தாலும் உறுதியுடன் நின்று போராடிக் கொண்டு இருந்தால் எதிரி எப்படிப்பட்ட பலசாலியாக இருந்தாலும் கடைசியில் இறங்கி வந்தே தீருவான் என்ற ஒரு புதிய தந்திரோபாயத்தை ஈரான் இந்த யுத்தத்தில் கற்றுக் கொடுத்து இருக்கின்றது.
அமெரிக்காவின் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் ஈரான் அடிபணியவில்லை.
யுத்த நிறுத்தம் செய்ய மாட்டோம், பேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம் முதலில் எங்களுக்கு மரியாதை கொடுத்து பேசுங்கள் என்றே விடயங்களைத் தான் ஈரான் அமெரிக்காவிடம் கூறிக் கொண்டு இருந்தது.
மேலும், ஹோர்மூஸ் நீரிணையை மூடி உலக எண்ணெய் சந்தையை அதிர வைக்கும் திறன் இன்னும் ஆயிரக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாராக இருப்பது பழிவாங்கும் திட்டத்துடன் காத்திருக்கும் proxy படைகள் அணு ஆயுத திட்டத்தை முழுமையாகக் கைவிடாத எச்சரிக்கை ஈரானின் ஓர்மம் அசரவைக்கிறது.
ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேலியத் தாக்குதலில் இரு நாடுகளும் பின்பற்றிய உக்தி பற்றியும், அடுத்து இந்த நாடுகள் கொண்டுள்ள திட்டம் பற்றியும் இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் நிராஜ் டேவிட் விளக்கியுள்ளார்.