நண்பனான இலங்கைக்கு எந்த நேரத்திலும் உதவ தயார் : ஈரான் அதிரடி அறிவிப்பு
இலங்கை எமது நட்பு நாடு. அந்த நாட்டுக்காக எந்த நேரத்திலும் உதவ ஈரான் தயாராக உள்ளதாக இலங்கைக்கான ஈரானிய தூதர் அலிரெஸா டெல்கோஷ் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளது.
எரிபொருள் அல்லது வேறு ஏதேனும் அத்தியாவசியப் பொருட்களைக் கோரினால், அவற்றை இலங்கைக்கு வழங்க ஈரான் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணை
ஈரான் தனது நட்பு நாடுகளுக்கு ஹார்முஸ் நீரிணையை மூடவில்லை என அலிரெஸா டெல்கோஷ் வலியுறுத்தினார்.

போர் காரணமாக இலங்கை சிக்கலில் மாட்டிக்கொள்ள ஈரான் விரும்பவில்லை. ஈரானுக்கு மிகவும் மரியாதைக்குரிய நாடாக இலங்கை உள்ளதாக ஈரானிய தூதர் அலிரெஸா டெல்கோஷ் கூறியுள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் டார்பிடோ தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவின் குழுவினரை, ஈரானின் கோரிக்கையின் பேரில் மீட்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
தேவையான வசதி
இலங்கை வழங்கிய உதவியை நினைவு கூர்ந்ததாகவும் அலிரெஸா டெல்கோஷ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஈரானில் உள்ள இலங்கையர்கள் நாட்டிற்குத் திரும்ப விரும்பினால், அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க ஈரானிய அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் ஈரானிய தூதர் அலிரெஸா டெல்கோஷ் மேலும் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானில் உச்சக்கட்ட பதற்றம்! அடுத்தடுத்து பதிவாகும் வெடிப்பு சத்தங்கள்: அதிரடி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 21 மணி நேரம் முன்
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam