உச்சகட்டத்தில் ஈரான் மற்றும் இஸ்ரேல் போர்! தயார் நிலையில் அவசர சேவைகள் - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்
இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஒரு புதிய அலையாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தொடர் தாக்குதல்களில் அதிகமாக கணக்கான ஆளில்லா விமானங்கள் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்! நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு
ஏவுகணைகள் இடைமறித்து அழிப்பு
இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air Defence Systems) தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும், இலக்கை நோக்கி வரும் ஏவுகணைகளை இடைமறித்து அழித்து வருவதாகவும் கூறியுள்ளது.

நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் பெரும் உயிரிழப்புகளும் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
இஸ்ரேலிய இராணுவ வானொலியின் (Army Radio) தகவல்படி, டிமோனா (Dimona) மற்றும் அராட் (Arad) ஆகிய பகுதிகளில் விழுந்த ஏவுகணைகளால் காயமடைந்த சுமார் 150 பேர், சிகிச்சைக்காக சொரோகா மருத்துவ மையத்தில் (Soroka Medical Centre) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தயார் நிலையில் அவசர சேவைகள்
நாடு முழுவதும் அவசர சேவைகள் (Emergency Services) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய தாக்குதலால் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதம் மற்றும் சொத்து சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சர்வதேச நாடுகள் அமைதி காக்குமாறு வலியுறுத்தி வரும் நிலையிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.
இதற்கிடையில், இஸ்ரேலின் தெற்கு நகரமான எராடில் நேரடியாக விழுந்த ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையைத் தடுப்பதில் தனது பாதுகாப்பு அமைப்புகள் எவ்வாறு தோல்வியடைந்தன என்பது குறித்து இஸ்ரேலிய விமானப்படை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri