இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது ஈரானின் பாரதூர குற்றச்சாட்டு
இஸ்ரேலும் அமெரிக்காவும் உலக நாடுகளை போலியாக அச்சுறுத்தி வருவதாக ஈரான் அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து இஸ்ரேலும் அமெரிக்காவும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதாரமற்ற தகவல்களைக் கூறி உலக நாடுகளை "அச்சப்படுத்தி" வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான 'இர்னா' (IRNA) வெளியிட்டுள்ள செய்தியில், தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

"ஈரான் அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராகவே உள்ளது. அதே நேரத்தில், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள எங்கள் நாடு முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்த கவலைகள் தேவையற்றவை, ஏனெனில் அவை அடிப்படை அற்றவை என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட போருக்கு மத்தியிலும், பேச்சுவார்த்தை நடத்தும் முடிவை ஈரான் எடுத்திருந்ததாக பாகாய் சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் (தற்போதைய போர் தொடங்குவதற்கு முன்) அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அந்தப் பேச்சுவார்த்தையின் போது, சில முக்கிய விவகாரங்களில் ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் கவலைகளைத் தீர்ப்பது மற்றும் ஈரானின் அணுசக்தி உரிமைகளை உறுதி செய்வது ஆகிய இரு தரப்பு நோக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டே அந்த உடன்பாடுகள் அமைந்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர்ந்து ஈரான் மீது பழி சுமத்தி வருவதாகக் கூறிய அவர், ஈரான் தனது அணுசக்தி உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்பதையும், சர்வதேச அழுத்தங்களுக்குப் பணியாது என்பதையும் தனது கருத்துகளின் மூலம் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam