ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தில் சென்னை அணி
கிரிக்கட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு மிக்க தொடரான ஐபிஎல் தொடரின் 17வது சுற்று விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது.
நடப்பு தொடரில் 12 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் 2 போட்டிகள் இடம்பெறவுள்ளன.
முதலாவது போட்டி சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கும், இரண்டாவது போட்டி சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளன.
நடப்பு தொடர்
இதன்படி நடப்பு தொடரில் புதிய தலைமையின் கீழ் விளையாடும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.

இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 4 புள்ளிகளுடன் +1.979 என்ற சராசரியை தன்வசப்படுத்தியுள்ளது.
இரண்டாவது இடத்தில் கொல்கத்தா அணி உள்ளது. ஸ்ராயஸ் ஐயர் தலைமையிலான அந்த அணி 2 போட்டிகள் விளையாடி 4 புள்ளிகளுடன் +1.047 சராசரியை பெற்றுள்ளது.
விராட் கோலி
தொடர்ந்தும் முறையே ராஜஸ்தான், சன்ரைசஸ், லக்னோ அணிகள் 3ஆம், 4 ஆம் 5 ஆம் இடங்களில் உள்ளன.

மேலும், பஞ்ஜாப், பெங்களுர், குஜராத், டெல்லி, மற்றும் மும்பை அணிகள் 6ஆம் 7 ஆம் 8 ஆம் 9ஆம் 10 ஆம் இடங்களை பெற்றுள்ளன.
தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் விராட் கோலி(Virat Kohli) அதிக மொத்த ஓட்ட எண்ணிக்கையையும், முஸ்தாபிசுர் ரஹ்மான்(Mustafizur Rahman) அதிக மொத்த விக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam