சிக்சர் மழை பொழிந்த டெல்லி அணியின் ஆட்டம்: மும்பைக்கு இமாலய இலக்கு
ஐபிஎல் தொடரின் 43 ஆவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 258 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.
டெல்லி வீரர் ஜேக் ஃபிரேசரின் சிறந்த துடுப்பாட்டமே அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான ஆரம்பமாக அமைந்தது.
நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதிவேக அரைசதம்
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
டெல்லி அணி சார்பில் 22 வயது இளம் வீரரான ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் 15 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
Enjoying the Fraser-McGurk show ?
— IndianPremierLeague (@IPL) April 27, 2024
A 1️⃣5️⃣ ball 5️⃣0️⃣ for the dashing opener as he equals his own record for the fastest fifty of the season ?
Follow the Match ▶️ https://t.co/BnZTzctcaH#TATAIPL | #DCvMI pic.twitter.com/hcnAwGhbg9
நடப்பு தொடரில் தனி வீரர் பெற்றுக்கொண்ட அதிவேக அரைசதம் இதுவாகும்.
மொத்தம் 27 பந்துகளை சந்தித்த ஜேக் 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 84 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |