கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பில் இந்தியருக்கு எதிராக இலங்கையில் வழக்கு
கிரிக்கெட் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக இந்தியருக்கு எதிராக இலங்கையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
லெஜென்ட் கிரிக்கெட் லீக் 2024ம் ஆண்டு போட்டித் தொடரின் போது இந்த ஆட்ட நிர்ணய சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இரண்டு அணிகளின் முகாமையாளர்கள் இந்த சதியுடன் தொடர்புபட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதம் கண்டி பல்லேகலே மைதானத்தில் லெஜன்ட் லீக் எனப்படும் ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் போட்டித் தொடர் நடைபெற்றிருந்தது.
கொழும்பு உயர் நீதிமன்றில் இந்த இந்தியர்களுக்கு எதிராக இன்றையதினம் சட்ட மா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இருவருக்கும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
யோனி பட்டெல் என்பவருக்கு எதிராக ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஆட்ட நிர்ண சதியில் ஈடுபடுமாறு தம்மை வற்புறுத்தியதாக இலங்கையின் நட்சத்திர வீரர் உபுல் தரங்க மற்றும் அவுஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் நீல் புரூம் ஆகியோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தியருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த இருவரும் நாட்டை விட்டு வெளியேறயக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |