முதல் தகுதி சுற்றில் சென்னை-குஜராத் அணிகள் மோதல்.!
நடப்பு ஐ.பி.எல் சுற்றின் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை- குஜராத் அணிகள் இன்றிரவு(23.05.2023) சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
தகுதிகான் சுற்று முடிவின் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் (20 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (17 புள்ளி), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (17 புள்ளி), மும்பை இந்தியன்ஸ் (16 புள்ளி) ஆகிய அணிகள் 'பிளே-ஓப்' சுற்றுக்குள் நுழைந்துள்ளன.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வியுறும் அணிக்கு இன்னொரு வாய்ப்பாக வெளியேற்றுதல் சுற்றில் ஜெயிக்கும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் விளையாட நேரிடும்.
அணி அங்கத்தவர்கள்
இதேவேளை சென்னை அணியில்: கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தோனி (C), தீபக் சாஹர், தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, பதிரன. ஆகியோரும் விளையாட உள்ளனர்.
மற்றும் குஜராத் அணியில்: சுப்மன் கில், விருத்திமான் சஹா, ஹர்திக் பாண்ட்யா (C), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ஷனகா, ராகுல் திவேதியா, ரஷித்கான், யாஷ் தயாள், முகமது ஷமி, நூர் அகமது, மொகித் ஷர்மா ஆகியோரும் விளையாட உள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 34 நிமிடங்கள் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
