ஐ.பி.எல் ஏல விற்பனை- ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு 5கோடி ரூபா, ஸ்ரேயாஸ் அய்யருக்கு 12.25 கோடி!
15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள், அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் ஆரம்பமாகின்றன.
இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் புதிதாக இணைந்துள்ளன.
இந்தநிலையில் 10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர்.
இதனை தவிர இன்று நடத்தப்பட்ட ஐபிஎல் ஏலத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை 5 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
இந்திய வீரர் ஷிகர் தவானை, 8.25 கோடி ரூபாவுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.
இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யரை, 12.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.
இந்திய வீரர் முகமது சமியை, 6.25 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது.
தென்னாப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடாவை, 9.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.
அவுஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ் 7.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.
நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட்ஐ. 8 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.
தென்னாப்பிரிக்க வீரர் பெப் டூ ப்ளெசிஸை 7 கோடிக்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.
இந்திய வீரர் மனீஷ் பாண்டேவை 4.60 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்ணி ஏலம் எடுத்தது.
இந்திய வீரர் ராபின் உத்தப்பாவை, 2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.
மேற்கிந்தியாவின் வெய்ன் பிராவோவை 4.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.
அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் 6.25 கோடிக்கு டெல்லி கேப்பிடள்ஸ் அணி ஏலம் எடுத்தது.
இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய்யை அடிப்படை விலையான 2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது.
இந்திய வீரர் தேவ்தத் படிக்கல்லை 7.75 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.
இந்திய வீரர் நிதிஷ் ராணாவை, 8 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.
மேற்கிந்தியாவின் வீரர் ஜேசன் ஹொல்டரை ரூ.8.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது.
இந்திய வீரர் ஹர்ஷல் பட்டேலை 10.75 கோடிக்கு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.
இந்திய வீரர் தீபக் ஹூடாவை 5.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்தது.
இதேவேளை ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் மற்றும் பங்களாதேச வீரர் ஷகிப் அல் ஹசன் ஆகியோரை ஏலம் எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை.
ஐ.பி.எல், ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
ஏலப்பட்டியலில் 370 இந்தியர், 220 வெளிநாட்டவர் என்று மொத்தம் 590 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் 23 வீரர்களும் உள்ளடங்குகின்றனர்.



