ஐபோன் பயனர்களுக்கு அதிர்ச்சி: பயனர் அனுமதி இன்றி ஊடுருவும் உளவு மென்பொருள் கண்டுபிடிப்பு!
ஐபோன் பயனாளர்களின் தனியுரிமைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், மில்லியன்கணக்கான சாதனங்களுக்குள் ஊடுருவக்கூடிய புதிய உளவு மென்பொருளை (Spyware) ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளது.
இந்த அதிநவீன மென்பொருள், பயனாளர்கள் எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்யாமலேயே (Zero-click exploit) தானாகவே தொலைபேசிக்குள் ஊடுருவும் திறன் கொண்டது என்று பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒருமுறை தொலைபேசிக்குள் நுழைந்துவிட்டால், அந்தச் சாதனத்தில் உள்ள குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், புகைப்படங்கள் மற்றும் இருப்பிடத் தரவு (Location data) உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் திருடவும், இரகசியமாகக் கெமரா மற்றும் மைக்ரோஃபோனை இயக்கவும் இந்த உளவு மென்பொருளால் முடியும்.
தனிநபர் பாதுகாப்பு
இந்த உளவு மென்பொருள் குறிப்பாக அரசு சாரா அமைப்புகள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
ஆப்பிள் நிறுவனம் தனது பாதுகாப்பு அமைப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்தி வந்தாலும், இத்தகைய மேம்பட்ட மென்பொருள்கள் அதன் பாதுகாப்புக் கோட்டையைத் தகர்ப்பது தொழில்நுட்ப உலகில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஐபோன் பயனாளர்கள் தங்களது மென்பொருளை (iOS) எப்போதும் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பித்துக்கொள்ளுமாறும், தேவையற்ற மற்றும் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் செய்திகளைத் தவிர்க்குமாறும் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
டிஜிட்டல் உலகில் பெருகிவரும் இத்தகைய உளவு வேலைகள், தனிநபர் பாதுகாப்பு குறித்த புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளன.
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam