இலங்கை வருமாறு வைகோவிற்கு அழைப்பு!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் வைகோவை இலங்கை வருமாறு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று வைகோவை சந்தித்து பேசிய அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட வைகோ,
''26 வயதில், நீங்கள் அமைச்சர் பொறுப்பு ஏற்று இருக்கிறீர்கள். என் வாழ்த்துகள். தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும். உங்களுக்கு நிறைய கடமைகள் உள்ளன,'' என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய ஜீவன் தொண்டமான், 'தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக, நுவரெலியாவில் ஒரு கல்லுாரி அமைக்க வேண்டும். ''தமிழக அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.
அதற்காக, முதல்வரையும் சந்திக்க இருக்கிறேன். நீங்கள் இலங்கைக்கு வந்து, தோட்டத் தொழிலாளர்களை சந்திக்க வேண்டும்,' என கூறியுள்ளார்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri