மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அழைப்பை நிராகரித்த அமைச்சர்(Photos)

Human Rights Commission Of Sri Lanka Tiran Alles Ministry Of Public Security
By Parthiban.A Mar 16, 2023 09:59 AM GMT
Parthiban.A

Parthiban.A

in சமூகம்
Report

மாணவர்கள் தமது உரிமைகளுக்காக முன்னெடுத்த பல போராட்டங்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறைகள் தொடர்பான விசாரணைக்குத் தகவல் வழங்க மறுத்த பொது பாதுகாப்பு அமைச்சருக்கு அழைப்பாணை அனுப்பியதை ஏற்றுக்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பின்வாங்கியுள்ளது.

மார்ச் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் கொழும்பு மற்றும் களனிப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அடக்குவதற்காக, 'பொலிஸார் செயற்பட்ட விதம் குறித்து விசாரணை நடத்துவதற்கு' அமைச்சர் டிரான் அலஸை அழைத்ததாக ஆணைக்குழு மார்ச் 9ஆம் திகதியன்று சிங்களத்தில் அறிவித்திருந்தது.

எனினும் நான்கு நாட்களுக்குப் பின்னர் அது அழைப்பாணை அல்ல, 'விளக்கத்திற்கான கோரிக்கை' என ஆங்கிலத்தில் வெளியிட்ட அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அழைப்பை நிராகரித்த அமைச்சர்(Photos) | Invitation To The Minister Of Public Security

அழைப்பாணை

“இதற்கமைய இந்தப் போராட்டங்களை ஒடுக்க பொலிஸ் அதிகாரிகள் கடைப்பிடித்த நடைமுறைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக பொதுப் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சராகக் கடமையாற்றும் அமைச்சர் டிரான் அலஸ் கடந்த 13.03.2023 அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்” என மார்ச் 9ஆம் திகதி ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் சிங்களத்தில் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பிற்கு அமைய அமைச்சர் ஆணைக்குழுவிற்குச் செல்லவில்லை...

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆங்கிலத்தில் அறிவித்தல் ஒன்றை விடுத்து, இலங்கையில் வசிக்கும் எந்தவொரு நபரையும் சாட்சியமளிப்பதற்கும் ஆவணங்களை வழங்குவதற்கும் ஆணைக்குழுவுக்கு அழைப்பதற்கான 'முழுமையான அதிகாரம்' இருந்தாலும், அமைச்சர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை எனக் குறிப்பிட்டுள்ளார்.

"இந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது, தனது செயலாளரின் ஊடாகச் செய்தது என்னவெனில், இலங்கை பொலிஸுக்குப் பொறுப்பான அமைச்சரை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வந்து சில விளக்கங்களை வழங்குமாறு கோருவதுதான். சிங்களத்தில் வெளியிடப்பட்ட 'அழைப்பாணை' மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆங்கிலத்தில் 'கோரிக்கையாக' மாற்றப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அழைப்பை நிராகரித்த அமைச்சர்(Photos) | Invitation To The Minister Of Public Security

அறிவிப்பு

அதற்குச் சவால் விடுத்த பொலிஸக்குப் பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ், விசாரணைக்காக அங்குச் செல்லப் போவதில்லை என பகிரங்கமாக அறிவித்திருந்தார். “ஊடகங்களில் வெளியாகும் பொய்யான அறிக்கைகளைத் தெளிவுபடுத்தவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என ஆங்கிலத்தில் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டிரான் அலஸை ஆணைக்குழுவிற்கு அழைப்பது தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த மார்ச் 9ஆம் திகதி சிங்கள மொழியில் வெளியிட்ட அறிவிப்பு ஆங்கிலத்தில் வெளியிடப்படவில்லை என்பதோடு, மார்ச் 13ஆம் திகதி ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு சிங்களத்தில் வெளியிடப்படாமல் இருப்பதையும் உறுதி செய்துள்ளது.

அந்த அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பும் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை...

முன்னாள் தலைவர் அமைச்சருடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எதிர்வரும் 13ஆம் திகதி முன்னிலையாகப்போவதில்லை எனத் தீர்மானித்த பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், உரிய முறைமையின் கீழ் உரிய அழைப்பாணை விடுக்கப்படாத காரணத்தினால் அங்குச் செல்வதில்லை எனத் தீர்மானித்ததாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அழைப்பை நிராகரித்த அமைச்சர்(Photos) | Invitation To The Minister Of Public Security

மனித உரிமைகள் ஆணைக்குழு

மேலும், மனித உரிமை மீறல் சம்பவமொன்றில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முதலில் செய்ய வேண்டியது, அதற்குப் பொறுப்பான அரச நிறுவனத்தின் அதிகாரிகளின் ஊடாக அறிக்கையொன்றைப் பெற்று ஆராய்வதே எனவும் மாறாக அந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரை அழைப்பதல்ல எனவும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் சட்டத்தரணியுமான பிரதிபா மஹாநாமஹேவா ஊடகங்களுக்குக் கூறியிருந்தார்.

போராட்டங்களைக் கலைப்பது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு முதலில் செய்திருக்க வேண்டியது, பொது பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சரை அழைப்பது அல்ல, அதற்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கோருவதுதான் எனக் கலாநிதி மஹாநாமஹேவா தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்ட நாட்களில் (ஒவ்வொரு துறையும் தனித்தனியாக) போராட்டத்தைக் கட்டுப்படுத்த களத்தில் பணியாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் பட்டியலை, 2023 மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்புமாறு 09 மார்ச் 2023 அன்று பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பெயர் பட்டியல் கிடைக்கப்பெற்றதா என்பதை ஆணைக்குழுவோ அல்லது அதன் தலைவியும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான ரோஹினி மாரசிங்கவோ பகிரங்கப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்றுறை, Aulnay-sous-Bois, France

24 Mar, 2024
மரண அறிவித்தல்

Naddankandal, முல்லைத்தீவு, Northampton, United Kingdom

08 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, London, United Kingdom

21 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, பிரான்ஸ், France

20 Apr, 2023
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
மரண அறிவித்தல்

வட்டுவாகல், புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம்

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரைச்சிக்குடியிருப்பு, உக்குளாங்குளம்

19 Apr, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மடிப்பாக்கம், India

20 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, கிளிநொச்சி, புளியம்பொக்கணை, மட்டுவில்

20 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, Kenton, United Kingdom

16 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, ஈரான், Iran, ஜேர்மனி, Germany, Markham, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, Napoli, Italy

14 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலை தீவு ஐயனார் கோவிலடி, கனடா, Canada

18 Apr, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

08 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், London, United Kingdom

18 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

19 Apr, 2023
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Wimbledon, United Kingdom

08 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், சரவணை, Paris, France

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வயாவிளான், Lyss, Switzerland

16 Apr, 2024
நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbrücken, Germany, London, United Kingdom

01 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், ஜேர்மனி, Germany

19 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பெல்ஜியம், Belgium, Gloucester, United Kingdom

20 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US